Home செய்திகள் இந்தியா பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன் : இளம் வயதில் இமைக்காமல் பார்க்க வைக்கும் இவரது...

பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன் : இளம் வயதில் இமைக்காமல் பார்க்க வைக்கும் இவரது சாதனை

908
0
பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன்
Share

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்க முடியும். அதேபோல் யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான வீடியோக்களை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும்.

பல்வேறு நோக்கத்தோடு வீடியோ பதிவு பலரும் வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவேற்று வருகின்றனர். ஒரு சிலர் பிரபலமடைய வேண்டும் என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சிலர் எதிர்பாராத வீடியோக்களையும், தங்களது அன்றாட நடைமுறைகளையும் பதிவிடுவார்கள் அந்த வீடியோ வைரலாகி பிரபலமடைவது உண்டு.

ரித்து ராக்ஸ் யூடியூப் சேனல் அதன்படி தற்போது ரித்து ராக்ஸ் (Rithu Rocks) என்ற சேனலில் பதிவிட்ட ஒரு வீடியோ இரண்டே நாட்களில் 145K பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இதில் பதிவிடப்பட்டுள்ள பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர்ஸ் கலாட்டா என்ற வீடியோ மிகவும் பிரபலமடைந்து வைரலாகி வருகிறது.

இயல்பாக பட்டையை கிளப்பும் சிறுவன் இதில் நடித்து ரித்து என்ற சிறுவர் மிகவும் இயல்பாக பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். இதில் நடித்துள்ள சிறுவனின் வயது 7 ஆகும். குறிப்பாக வீடியோ முடிவில் வரும் ப்ளூப்பர்ஸ் பலரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. ரித்து என்ற ஒரே சிறுவன் பெண் தொகுப்பாளராகவும், ஆண் செய்தியாளராகவும், விவசாய முதியவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வார்த்தைக்கு ஏற்ப முகபாவனை இதற்கு முன்பு இதேபோல் ஜம்ப் கட்ஸ் என்ற யூடியூப் சேனல் வீடியோ மிகவும் பிரபலமடைந்தது. அதில் ஒரே நபர் அனைத்து கதாபாத்திரத்திலும் தோன்றி அசத்தியிருப்பார். தற்போது இந்த 7 வயது சிறுவன் உச்சரிக்கும் தமிழ் சொல் உட்பட அதற்கேற்ப முகபாவனை அனைத்தும் பலரையும் கவர்ந்து வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here