Home செய்திகள் இந்தியா நதிகளைக் காப்பாற்றும் பனை மரங்கள்

நதிகளைக் காப்பாற்றும் பனை மரங்கள்

465
0
Share

நதிகளைக் காப்பாற்றும் பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாகக் கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தைத் தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையைத் தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரைக் குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப் பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜீவ நதியாக ஓட வழிவகை செய்யும்… இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை நதிகளைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதைத் தவிர்க்கவும்.

-நன்றி

மரங்கள்

http://organicananth.blogspot.com


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here