Home செய்திகள் இந்தியா விஜயின் மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்

விஜயின் மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்

758
0
தளபதி64
Share

கைதி படம் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜும்,இளையதளபதி விஜயும் ஒரு படத்தில் இணைந்தனர்.இதனை விஜயின் ரசிகர்கள் மிகப் பெரிய ட்ரெண்டாக்கினர் ,ஏனெனில் கைதி படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருப்பார் லோகேஷ் கனகராஜ்

master vijay third look
Master

மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

master vijay release date

ஜனவரி 26 ஆம் தேதி, மாஸ்டர் பட குழு , விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரைக் கொண்ட மூன்றாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே, விஜய்யின் தீவிர ரசிகர்கள் ட்விட்டரில்  #மாஸ்டர் என்ற  ஹாஸ்டேக்கை ட்ரெண்டாக்கிக்கொண்டிருந்தனர்..

master vijay posterஇந்தநிலையில் புதிதாக வெளியிடப்பட்ட மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டரில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி  சிங்கத்தைப் போன்று கர்ஜித்துக் கொண்டு மோதுவதற்குத் தயாராக உள்ளது போன்ற தோற்றம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . எதிர்பார்த்தபடி, புதிய போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்களில் வைரலாகியது.மேலும் இந்த போஸ்டரை மையமாக வைத்து விஜயின் ரசிகர்களும் பல்வேறு போஸ்டர்களை எடிட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here