Home செய்திகள் இந்தியா பாகுபலி நடிகர் ராணாவின் அடுத்த படம், மூன்று மொழிகளில் வெளியாகிறது…

பாகுபலி நடிகர் ராணாவின் அடுத்த படம், மூன்று மொழிகளில் வெளியாகிறது…

705
0
kaadanTeam
Share

பாகுபலி படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராணாவை அனைவருக்கும் தெரியும். இவர் இப்பொழுது பிரபு சாலமன் இயக்கத்தில், காட்டினையும் அதில் இருக்கும் மிருகங்களையும் மையமாகக் கொண்டு எடுத்துள்ள படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

Kaadan Movie Raana and Vishnu

இந்த படம் மூன்று மொழிகளின் வருகிற ஏப்ரல் 2 வெளிவர உள்ளது. இதற்கு காடன் என்று தமிழிலும், ஆரண்யா என்று தெலுங்கிலும், ஹாதி மேரே சாதி (லிட் யானைகள் என் நண்பர்கள்) என்று ஹிந்தியிலும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணுவிஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோய உசேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெவ்வேறு நடிகர்களுடன் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் ராணா விலங்குகள் மொழி பேசுபவராக நடித்துள்ளார். இதற்காக தன் உடல் எடை குறைத்தும், நீண்ட நாட்களாகத் தாடி வளர்த்தும் உள்ளார். மேலும் இதற்காக 1 மாதம் காட்டில் யானைகளுடன் தங்கியிருந்தார். பிரபு சாலமன் ஏற்கனவே மைனா, கும்கி எனக் காட்டை வைத்து படம் எடுத்துள்ளார். இருப்பினும் இந்த படம் காட்டு விலங்குகளுக்கு ஏற்படும் அநியாயம் பற்றிப் பேசப்படும் படமாக இருக்கும் என்றும் காடுகளின் அவசியத்தைக் குறிக்கும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Kaadan Movie

இந்த படம் மூன்று மொழியில் எடுக்கப்பட்டதால் வசனங்களைத் தமிழில் பிரபு சாலமனும், தெலுங்கில் வனமாலியும், ஹிந்தியில் நிரஞ்சன ஐயங்காரும் எழுதியுள்ளனர். மேலும் பிரபு சாலமன் படத்தைப் பற்றிக் கூறுகையில் இந்த புதிய படம் உண்மையான சம்பவங்கள் மற்றும் மக்களால், குறிப்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜாதவ் பயேங்னால் ஈர்க்கப்பட்ட ஒரு புனைகதை.

Master படம் amazon OTT -ல் வெளியீடா ? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

அசாமில் உள்ள ‘மைசிங்’ பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ வெற்றியாளர், 1300 ஏக்கருக்கும் மேற்பட்ட தரிசு நிலங்களை ரிசர்வ் காடாக மாற்றினார். காட்டில் தாழ்வாரங்களை ஆக்கிரமிக்கும் நகரமயமாக்கலுக்கு எதிராக எழுந்து நிற்கும் பண்டேவ் என்ற காட்டில் மனிதனாக ராணா நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

படம் அடர்ந்த காட்டுப் பகுதியை மையமாக வைத்துள்ளதால் கேரளா, சதாரா, மஹாபலேஸ்வர் மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களின் வனப்பகுதிகளில் 100 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியாகி வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here