Home செய்திகள் இந்தியா ஆச்சரியமூட்டும் அளவில் சாதனை படைத்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் வசூல்…

ஆச்சரியமூட்டும் அளவில் சாதனை படைத்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் வசூல்…

297
0
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
Share

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசாகி திரைக்கு வந்த படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் நாயகனாக துல்கர் சல்மானும், நாயகியாக ரிதுவர்மாவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் கௌதம்மேனன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் மற்றும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்களான ரக்‌ஷன்  மற்றும் நிரஞ்சனி நடித்துள்ளனர், தேசிங்பெரியசாமி படத்தை இயக்கியுள்ளார். படம் வெளியான அன்று பெரிய அளவு வசூல் செய்யவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூலை வாரிக் குவித்துள்ளது.

படத்திற்கு ஊடக தரப்பில் நல்ல விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. காதல், காமெடி, துப்பறிதல் எனப் பல விசயங்கள் இப்படத்தில் இருக்க ரசிகர்களுக்கு ஒரு ஜாலி ரைடு போலத் தான் படம் முழுக்க அமைந்துள்ளது. இதனால் தான் ரூ 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ 1 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.

kannum kannum kollaiyadithalவெள்ளி – ரூ 13.4 லட்சம்
சனி – ரூ 31.6 லட்சம்
ஞாயிறு – ரூ 35.7 லட்சம்
திங்கள் – ரூ 18.3 லட்சம்

முதல் நாளில் மிகக் குறைவான வசூல் ஈட்டியிருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் பல மடங்கு அதிகரித்தது.

அஜித் நடித்த படத்தினை ரீமேக் செய்த தெலுங்கு நடிகர் ? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் !…

அதோடு தமிழகம் தாண்டி கேரளாவிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படம் சிங்கப்பூரில் கடந்த 2 நாட்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றதாம்.

மேலும், துபாயில் இப்படம் ரூ 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here